|

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்திருவிழா.. சலங்கை சப்பரத்தில் சுவாமி வீதி உலா.!

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்திருவிழா.. சலங்கை சப்பரத்தில் சுவாமி வீதி உலா.!


திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திக்கை திருவிழா முன்னிட்டு இரண்டாம் நாள் இன்று காலை உற்சவர் முருகன் தெய்வானை சலங்கை சப்பரத்தில் வீதி உலா

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள் கிழமை (நவம்பர்16) கார்த்திகை தீபத் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து நேற்று காலை உற்சவர் சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்மன் சர்வ அலங்காரத்தில் சலங்கை சப்பரத்தில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து சுவாமி சன்னதி தெரு பெரிய ரத வீதி மேலரத வீதி கீழரதவிதி முக்கிய வீதியில் வழியாக வீதி உலா வந்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் அதன் முன்பு சுவாமி கோவிலை சென்று அடைந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 23ஆம் தேதி மாலை 7 மணிக்கு மேல் பட்டாபிஷேகம் நடைபெறும்.

அதன் பின்பு 24 ஆம் தேதி திருக்கார்த்திகை முன்னிட்டு காலை 8 மணிக்கு சிறிய வைரத் தேரோட்டம் நடைபெறும் அதன் பின்பு மாலை கோவில் மூலஸ்தானத்தில் பால தீபம் ஏற்றப்பட்டு ஆலயமணி ஒழித்த பின்பு மலை மீது உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் மண்டத்திலா? அல்லது மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மகா தீபம் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Similar Posts

Leave a Reply