பரபரப்பு: ஹெச். ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு இரு வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பெரியார் சிலை உடைப்பது, அறநிலைத்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரை அவதூறாக பேசியது, திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பேசியது உள்பட 11 வழக்குகள் ஹெச்.ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு நகரம் மற்றும் கருங்கல்பாளையம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகளில் காவல்துறையால் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெரியார் சிலையை உடைப்பேன் மற்றும் கனிமொழி குறித்து அவதூறாக பதிவிட்ட வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!