திமுக-அதிமுக நேரடி போட்டி..! யோசிச்சு வாக்களிக்க வேண்டிய நேரம் இது… கிருத்திகா தங்கப்பாண்டியன் பிரச்சாரம்!

திமுக-அதிமுக நேரடி போட்டி..! யோசிச்சு வாக்களிக்க வேண்டிய நேரம் இது… கிருத்திகா தங்கப்பாண்டியன் பிரச்சாரம்!

கடந்த 5 ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாகா பதவி வகித்த போது தொகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் குறிப்பாக நன்றி கூட தெரிவிக்காமல் இருந்தவர் MLA ராஜன் செல்லப்பா – திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி

ஒரு பெண்ணாக எனக்கு இந்த வாய்ப்பை தலைவர் அவர்கள் கொடுத்திருக்கிறார் மகளிர் ஆகிய உங்களை நம்பி தான் நான் இருக்கிறேன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.

தோப்பூர் பகுதி பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லை சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் உறுதியாக கொண்டு வருவேன்

கடந்த ஐந்து ஆண்டுகளில் சொன்னதை செய்தார் ஸ்டாலின் மகளிர் காண உரிமை தொகையை சொன்னது போல் அனைவருக்கும் கொடுத்தார்

அதேபோன்று 2026 சட்டமன்ற தேர்தலில் நிறைய வாக்குறுதிகளை சொல்லி இருக்கிறார் நிறைய திட்டங்களை வைத்து இருக்கிறார்

மகளிர் உதவித்தொகை 1000 ஆக இருந்ததை 2000 ரூபாயாக தர இருக்கிறார்

வீட்டில் இருக்கும் பெண்களை வேலைக்கு போகாமல் இருக்கும் பெண்களை சும்மா இருக்கிறார்கள் என்று சொல்வார்கள்

வேலைக்குப் போகும் பெண்களை விட வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தான் வேலைப்பளு அதிகம்

அந்த அனைத்து வேலைகளையும் செய்த பெண்களுக்கு கிடைக்கப்பட்ட பெயர் சும்மா இருக்கிறார் என்பது

அவர்கள் சும்மா இருக்கக் கூடாது என்று தான் உரிமைத் தொகையை ஆயிரம் ரூபாய் வழங்குகிறார் அதனை 2000 ஆக வழங்கி கௌரவப்படுத்தி இருக்கிறார்

மகளிர் சுய உதவி குழு வைத்திருப்பவர்கள் ஐந்து லட்ச ரூபாய் கடன் உதவி தொகை வழங்கப்படும்

பள்ளிக் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயன் அடைந்து வருகின்றனர்

பள்ளி குழந்தைகள் காலை உணவு திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை உயர்த்தி இருக்கிறார்

தோப்பூர் மந்தை கிராம மக்களுக்கு செல்லியம்மன் கோவில் கம்மாக்கரை உள்ள காலி இடத்தில் செட் ஒன்று அமைத்து தர இருக்கும் கம்மாய்களில் மீன்பிடி வசதி அமைத்து தரப்படும் மின்விளக்கு வசதி அமைத்து தரப்படும்

தோப்பூர் கிராமத்திற்கு பேருந்து நிறுத்தம் கண்டிப்பாக கொண்டு வருகிறேன் என்று உறுதி அளிக்கிறேன்

அனைத்து தெருக்களுக்கும் தார் சாலைகள் அமைத்து தருவேன்

இந்த கிராமத்திற்கு என ஒரு நாடகம் மேடை அமைத்து தரப்படும் இங்கு உள்ள அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லைமாணவர்களின் கோரிக்கையை ஏற்று விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்

100 நாள் வேலை வாய்ப்பை நிறுத்தியது பாஜக அரசின் மோடி உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக அரசு 100 நாள் வேலையை எதற்காக நிற்கிறீர்கள் என்று கேள்வி கேட்க வேண்டும்

திமுகவும் அதிமுகவும் தான் தற்பொழுது உள்ள தேர்தலின் நேரடியாக களம் சந்தித்து உள்ளோம்

திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் சாலை வசதி குடிதண்ணீர் வசதி தெரு விளக்கு கழிவுநீர் சாக்கடை வசதி போன்றவை குறையாகவே உள்ளது அதை நான் நிச்சயமாக அனைத்தையும் பூர்த்தி செய்வேன் என கிருத்திகா தங்கப்பாண்டியன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!