அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் கிராம மக்கள் – அரை நூற்றாண்டுகாலமாக கண்டுகொள்ளாத அரசு!

அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் கிராம மக்கள்! கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அல்லல்படுவதால் இதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வருமா? என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடம் இருந்து வருகிறது.

“சாக்கடை உண்டு தண்ணீர் போக வழி இல்லை”

“குடிநீர் உண்டு குடிநீர் பிடிக்கு இடம் இல்லை “

“வழிகள் உண்டு நடைபாதை இல்லை”

“சாலைகள் உண்டு பேருந்து இல்லை”

“விளக்குகள் உண்டு எரிவது இல்லை”

“நீர் தேக்க தொட்டி உண்டு நீர் இல்லை”

“புகார்கள் உண்டு தீர்வுகள் இல்லை”

“போராட்டங்கள் உண்டு விடிவுகள் இல்லை”

“எல்லாமே உண்டு எதுவுமே இல்லை”

பல ஆண்டுகளாக ஒரு கிராமம் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் அல்லல்பட்டு வரும் அவலநிலையில் இருக்கிறது.

நீலகிரி மாவட்டம் குந்தா வட்டம் மேல்குந்தா பஞ்சாயத்திற்கு உட்பட்ட வார்டுகளில் ஒன்றுதான் அட்டுமண்ணு மலைக்கிராமம். இந்த ஊரில் சுமார் 40 வீடுகள் இருக்கின்றன. இக்கிராம மக்கள் தொகை 149 பேர். ஒரு அரை நூற்றாண்டு காலமாக தங்கள் ஊருக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்துதரவில்லை என்று தொடர் புகார்களை அளித்தவண்ணம் இருக்கிறார்கள் இந்த மலைகிராமத்து மக்கள்.

நடவடிக்கை இல்லை:

பஞ்சாயத்து அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று நீலகிரி மாவட்டத்தின் அனைத்து அதிகாரிகளிடமும் மனுக்களை அளித்தும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமும் முதலமைச்சரின் தனிப்பிரிவையும் அணுகியும் எந்த எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என இப்பகுதி மக்கள் புலம்புகிறார்கள்.

நோய்த் தொற்று அபாயம்:

பல வருடங்களாக திறந்த நிலையில் மராமத்து பணி செய்யப்படாமல், சிதிலமடைந்த சாக்கடை கால்வாய் மழைக்காலங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாக வேண்டி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

காட்சிபொருளான சமுதாயக்கூடம்:

ஊர்காரர்கள் தனது சொந்த நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்த இடத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தில் தான் சுப நிகழ்வுகளும், இரங்கல் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன ஆனால் அந்த கட்டிடமும் விரிசல் ஏற்பட்டு சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது.மக்கள் நடக்கும் நடைபாதை அகலப்படுத்தப்டபாமால் சிதைந்து முட்புதர்களும் மண்டிக்கிடப்பதால் நடைபாதை இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்தித்திற்கு ஆளாகிறார்கள்.

குடிநீர் பிரச்சினை:

குழாயடியில் தண்ணீர் பிடிக்கும் கட்டிடம் நாற்பது வருடம் பழையது. தரையெல்லாம் பெயர்ந்து குண்டும் குழுயுமாக நீர் தேங்கிக்கிடக்கும் இந்த இடம் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்து இந்த கிராமத்தை தொடர்ந்து நோய்க்காடாக உருமாற்றி வருகிறது .

இந்த குக்கிராமத்தை சுற்றி உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொறுத்தப்படாமல் இப்பகுதி இருளில் கிடப்பதால், வனவிலங்குகளின் நடமாட்டத்தால் இரவு நேரங்களில் மக்கள் வெளியில் வரமுடியாமல் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

மேலும் மேல்குந்தா பஞ்சாயத்தின் மூலமாக மாதாந்திர துப்புரவு பணி மேற்கொள்ளப்படுவதில்லை, குறிப்பாக குப்பை மேலாண்மை செய்வதும், குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெறுவதே இல்லை. சுகாதாரத்திற்கான நோய்த்தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

நகரத்திற்கும் இக்கிராமத்திற்கும் ஐந்து கிலோமீட்டர் தொலைவு இருப்பதால் இந்த மக்களின் நேரம் ஆரோக்கியமான வகையில் பொழுதை கழிப்பதற்காக இந்த கிராமத்திற்கு நூலகம் அமைத்துத்தரவேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையும் நிலுவையில் உள்ளது எனவும் அடிப்படை வசதிகளை செய்து தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதியைச் சார்ந்த காய்கறி விவசாயம் மற்றும் தேயிலைத் தோட்டங்களிலும் வேலை செய்து இந்த ஊரில் வசித்துவரும் பீமன், ராமன், சுந்தரம், மூர்த்தி , சிவகுமார், ரவிக்குமார், போஸ், சதீஷ், மகேஷ், சுதாகர் , ஜெகன்,கோகுல், கருண், கலை, ஜெயகுமார்,சேகர் ஆகியோர் இதுபோன்று ப

பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் இக்கிராமத்தில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வந்ததோடு நமது “லெமூரியா நியூஸ் தமிழ்” ஊடகத்தின் “புகார்பெட்டி” தளத்திற்கு புகார் அனுப்பினர்.அதன்பேரில் செய்தி வெளியிட்டுள்ளோம் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2 thoughts on “அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் கிராம மக்கள் – அரை நூற்றாண்டுகாலமாக கண்டுகொள்ளாத அரசு!

  1. “இந்தியா கிராமங்களில் வாழ்கிறது” இந்தியாவில் கிராமங்கள் வாழ்கிறதா? என்ற முரணான கேள்விக்கு விடை காண வைத்திருக்கும் ஜனநாயகத்தின் குரலற்றவர்களின் குரலாக ஒலித்திருக்கும் லெமூரியாவிற்கு கிராம மக்கள் சார்பாக நன்றிகள்

    1. இறைவன் அருளால் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டுகிறேன் ஐயா
      முருகா

Leave a Reply

error: Content is protected !!