தூத்துக்குடி அருகே ஆயிரம் கண்ணம்மாள் கோவில் கொடை விழா நடைபெற்றது!

ஆயிரம் கண்ணம்மாள் திருக்கோவில் கொடை விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. விழாவையொட்டி பால்குட ஊர்வலம், பாலாபிஷேகம், தீபாராதனை மற்றும் உச்சிகால பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், அன்னதான நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்தினர்.

தூத்துக்குடி அருகே கீழ்த்தட்டப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் கண்ணம்மாள் திருக்கோவில் கொடை விழா கடந்த 19.05.2026-ந் தேதி செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 25.05.2026 அன்று மாலை 6 மணியளவில் நையாண்டி மேள வாத்தியம் முழங்க தீர்த்தம் எடுத்துவரும் நிகழ்வும், குடி அழைப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று 26.05.2026 அன்று காலை விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் ஆயிரம் கண்ணம்மாள் திருக்கோவில் அம்மன், உச்சிமாகாளியம்மன் மற்றும் சந்தனமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மதியம் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை மற்றும் உச்சிகால பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு வண்ண மலர்கள் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.

மேலும், கோயில் வாசல் முன்பாக கடந்த 3 நாட்களாக நடைபெற்ற அன்னதான விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அறுசுவை உணவருந்தினர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!