கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த தவெக நிர்வாகி அதிரடி கைது.!

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த தவெக நிர்வாகி அதிரடி கைது.!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் அரசு மதுபானக் கடைகள் இல்லாததால் மது பிரியர்கள் வாடிப்பட்டி, சிக்கந்தர்சாவடி, சமயநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு சுமார் 15 முதல் 20 கிலோமீட்டர் தூரம் வரை சென்று மது பாட்டில் வாங்கக்கூடிய நிலை ஏற்பட்டிருந்தது இந்த நிலையில் மது கடைகள் இல்லாததை சாதகமாகப் பயன்படுத்தி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வந்ததாக காவல்துறைக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு கிராம பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர் மது விற்றுக்கொண்டிருந்த தெய்வம் என்பவரைக் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில் கைதான தெய்வம் அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்பதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

மது பாட்டில்களுடன் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என நடவடிக்கை எடுத்தவரும் தமிழக அரசுக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை விக்கிரமங்கலம் பகுதியில் வீடுகள் மற்றும் கடைகளில் சர்வ சாதாரணமாக மது விற்பதாக பெண் ஒருவர் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர் பகுதியிளும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த தமிழக வெற்றி கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரை மாவட்டம் மட்டும் இன்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள் து.

தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!