
திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழு திடீர் ராஜினாமா… அதிர்ச்சியில் பக்தர்கள்.! பரபரப்பு பின்னணி என்ன.?
திருப்பரங்குன்றம் தீப விபகாரம் மற்றும் பழனி கோவில் நில முறைகேடு தமிழகம் முழுக்க பரபரப்பை கிளப்பியிருக்க கூடிய நிலையில், திருப்பரங்குன்றம் அறங்காவலர்கள் திடீர் ராஜினாமா பேசுபொருளாகியுள்ளது.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர், சத்யபிரியா, சண்முக சுந்தரம் ராமையா ஆகியோர் தங்கள் பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளனர்.
மற்றும் பொம்ம தேவன், மணிச்செல்வம் ஆகிய இருவரும் ராஜினாமா செய்யவில்லை .
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக சத்யபிரியா பாலாஜி, துணைத் தலைவராக சண்முகசுந்தரம் மற்றும் குழு உறுப்பினராக ராமையா ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
இவர்கள் ஏற்கனவே கடந்த முறையும் அறங்காவலர்களாகப் பணியாற்றிய நிலையில், இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்று 6 மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையிலும், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பதவிக் காலம் பாக்கி உள்ள நிலையிலும், இவர்கள் மூவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
தங்கள் ராஜினாமா கடிதத்தை திருக்கோயில் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அவர்கள் அளித்துள்ளனர். பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பே, மூவரும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்ததற்கான முழுமையான காரணங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் குழுவில் மூன்று பேர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒன்றறை ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் அறங்காவலர் குழு திடீர் ராஜினாமா செய்தது திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீர் ராஜினாமா செய்தது ஏன்? என்பதற்கு எந்த காரணத்தையும் அவர்கள் கூறவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.