கலைத்துறையில் இருந்து வந்த முதல்வர் விஜய்… தகரக் கொட்டகையில் அடைத்து அவமதிக்காதே! மதுரையில் போராட்டம் வெடிக்கும்!

கலைத்துறையில் இருந்து வந்த முதல்வர் விஜய்… தகரக் கொட்டகையில் அடைத்து அவமதிக்காதே! மதுரையில் போராட்டம் வெடிக்கும்!

தமிழ்நாடக உலகின் தந்தை என்று போற்றப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் சிலை தமுக்கம் திடல் முன்பாக அமைந்திருந்தது. அவரின் சிலை சாலை விரிவாக்கத்திற்கு தடையாக இருப்பதாகக் கூறி கடந்த திமுக ஆட்சியில் அகற்றப்பட்டது.

இந்நிலையில், அகற்றப் பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் சிலையை உலகத் தமிழ்ச் சங்க கட்டிடத்தில் வைக்கப் போவதாக அறிவித்து விட்டு, தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு தகரக் கொட்டகையில் அவரின் சிலையை கோணிப்பையை சுற்றி அடைத்து வைத்துள்ளனர். இது அப்பட்டமாக சங்கரதாஸ் சுவாமிகள் சிலையை அவமதிக்கும் போக்காகும்.

சங்கரதாஸ் சுவாமிகள் சிலையை மீண்டும் அதே தமுக்கம் திடல் முன்பாக நிறுவிடக் கோரியும், ஏற்கெனவே தமுக்கம் கலையரங்கத்திற்கு சூட்டப் பட்ட “சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கம்” பெயரை மீண்டும் சூட்டிடக் கோரியும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர், துணை மேயர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தோழர் கதிர் நிலவன் ( த.தே.பே. மாநகர் செயலாளர்,மதுரை) அவர்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கை மனுவை மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அவர்களிடமும், மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராசன் ஆகியோரிடம் அளித்தார்.

இந்நிகழ்வில் தோழர் அருணா ( தலைவர், மகளிர் ஆயம்), பேரியக்கத் தோழர்கள் ரெ.இராசு, விடியல் சிவா, மேலூர் நடராசன், கோபிநாத், புருசோத்தமன், சுதர்சன், பாண்டியராசன் உள்ளிட்ட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கலைத் துறையில் இருந்து வந்துள்ள முதல்வர் விஜய் அவர்கள் கலைத்துறையைச் சேர்ந்த மூத்த ஒரு தமிழ் நாடகக் கலைஞரின் சிலைக்கு நேர்ந்த அவலத்தைப் போக்கி , மீண்டும் தமுக்கம் திடல் முன்பாக அவரின் சிலையை அமைத்திடவும், தமுக்கம் கலையரங்கத்திற்கு அவரின் பெயரை மீண்டும் சூட்டிடவும் முன்வர வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் தமிழ் நாடகக் கலைஞர்களை திரட்டி தமிழ்த் தேசியப் பேரியக்கம் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப் பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!