திமுக ஆட்சியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு… தவெக ஆட்சியில் தகரம் வைத்து அடைத்த அவலம்.!

திமுக ஆட்சியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு… தவெக ஆட்சியில் தகரம் வைத்து அடைத்த அவலம்.!

மதுரை மாவட்டம், மேற்கு தாலுகா கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணி துறை கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும்.பாசன வாய்க்காலை அஷ்டலட்சுமி நகரில் பிளாட் எண்.31 இல் குடியிருக்கும் அருள்பாரதி என்பவர் மகன் அருள்பிரிட்டோராஜ் குடும்பத்தினர் நீர் வரத்து வாய்க்காலை மறைத்து தகரம் அடைத்து ஆக்கிரமித்துள்ளனராம். இதே நபர் கடந்த 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே வாய்க்காலை தகரம் அடைத்து ஆக்கிரமித்த போது விவசாயிகள் புகார் கூறியதை அடுத்து அப்போதைய மேற்கு தாலுகா தாசில்தார் கிருஷ்ணன் தலைமையிலான வருவாய் துறையினர் அந்த ஆக்கிரமிப்பை அகற்றி சென்றனர். கடந்த 5 ஆண்டுகளாக அமைதியாக இருந்த நபர் மீண்டும் தற்போது தவெக ஆட்சியில் மீண்டும் நீர் வரத்து கால்வாயை ஆக்கிரமித்து தகரம் அடைத்து மறைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும்

மேலும் இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் பிளாட் எண்.31 ல் வசிக்கும் நபருக்கு கிழக்கே 57 அடியும் மேற்கே 61 அடியும் தெற்கு வடக்காக 42 அடியும் உள்ள மனையில் இருந்து தெற்கே சுமார் 10 அடி அகலமுள்ள நீர்வரத்து வாய்க்காலை மறைத்து ஆக்கிரமித்து தகரம் அடைத்துள்ளதாகவும், அதிகாரிகள் எல்லோரும் அவருக்கு ஆதரவாக உள்ளதால் எந்த அதிகாரியும் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என அந்த ஆக்கிரமிப்பாளர் விவசாயிகளிடம் கூறி வருகின்றாராம். கடந்த 5 ஆண்டுகளில் அமைதியாக இருந்தவர்கள் தவெக ஆட்சியில் விவசாய கால்வாயை மறைத்து தகரம் அடைத்து ஆக்கிரமிப்பது மாற்றத்திலும் பெரும் ஏமாற்றம் என விவ்சாயிகள் புலம்புகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!