கோவில் சொத்துக்களை மீட்போம்: மதுரை ஆலோசனை கூட்டத்தில்.. தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு  தீர்மானம்!

கோவில் சொத்துக்களை மீட்போம்: ஆலோசனை கூட்டத்தில்.. தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு  தீர்மானம்!

தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பாக விருது வழங்கும் விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பாக நிறுவனத் தலைவர் செந்தில் ஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி தென் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கும் விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. 

இதில் மாநிலச் செயலாளர் முத்துக்குமார், தென் மண்டல பொறுப்பாளர் பாக்யராஜ், டெல்டா மாவட்ட பொறுப்பாளர் கண்ணன் ஜி, தென் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் உஷா தேவி, மாநில செயலாளர் திருநெல்வேலி மணி மகேஷ், மாநிலத் துணைசெயலாளர் நீலகிரி சிவக்குமார் மற்றும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள், திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள், கோவை மாவட்ட பொறுப்பாளர்கள், மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள், மதுரை புறநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில் சொத்துக்களை மீட்டெடுத்து அறம் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கிராம கோவில்கள் பாதுகாப்பு மற்றும் திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் அறம் சார்ந்த பணிகளை நேர்மையாக செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வை மதுரை மத்திய மாவட்ட தலைவர் திருப்பதி ஜெயக்குமார் ஏற்பாடு செய்திருந்தார். மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மணிமாறன், மதுரை மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேலன் நன்றி உரை தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!