
வாழ்க்கையைத் துரத்தும் இளைஞர்கள்… இயக்குநரின் 4 ஆண்டு கனவு – “இரவின் விழிகள்”திரில்லர் திரைப்படம் எப்போது? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
இயக்குநர் சிவா வெங்கடாசலம் மற்றும் அவரது குழுவினர், “இரவின் விழிகள்” என்கிற மர்மத் திரில்லர் திரைப்படத்தை உருவாக்குவதற்காக 3 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.


இயக்குநர் சிவா வெங்கடாசலத்தின் முதல் படமான “இரவின் விழிகள்” திரைப்படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வராத நிலையில், தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் Pilot Film – ஆக தயாரித்து, இயக்கி வருகிறார் சிவா வெங்கடாசலம்.
திருநெல்வேலியை மையமாகக் கொண்டு தொடங்கும் இப்படத்தின் கதைக்களம், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசும் ஒரு மர்மத் திரில்லர் திரைப்படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தைப் பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், படக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தங்களது முக்கிய நோக்கம் என்றும் இயக்குநர் சிவா வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
“வாழ்க்கையைத் துரத்தும் இளைஞர்கள், தங்களது லட்சியத்தையும் துரத்தி ஓட வேண்டும்” என்று இயக்குநர் சிவா வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
“இரவின் விழிகள்” திரைப்படம், பல்வேறு தடைகளையும் சவால்களையும் கடந்து உருவாகியுள்ள நிலையில், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.