
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு துணை ஆணையர் நியமனம்.!

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துணை கமிஷனர் பதவிக்கு 2-வது முறையாக பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கோவிலில் கடந்த ஒரு மாதமாக கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
5 மாதத்திலேயே அதிகாரி அதிரடி மாற்றம்:
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை கமிஷனராக கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி அன்று ரா.ஞானசேகரன் பதவி ஏற்று பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் அங்கு இருந்து 5 மாதத்திலேயே அதிரடியாக மாற்றப்பட்டார்.
இந்த நிலையில்திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு துனண கமிஷனராக சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலின் துணை கமிஷனராக பணியாற்றி வந்த செ.சுரேஷ் நியமிக்கப்பட்டார். இவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து பதவி ஏற்று பணியாற்றுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் சில வாரங்கள் உருண்டோடிய நிலையிலும் அதிகாரி செ சுரேஷ் பதவி ஏற்க முன் வரவில்லை.
அதிகாரி இல்லாததால் பணிகள் ஸ்தம்பித்தது:
இதனால் திருப்பரங்குன்றம் கோவிலில் பல்வேறு பணிகள் ஸ்தம்பித்தது குறிப்பாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு பதிவேடுகள் குறித்து ஐக் கோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தல் உள்ளிட்ட திட்ட பணிகள் ஸ்தம்பித்தது. இதனால் நியமிக்கப்பட்ட துணை கமிஷனர் செ.சுரேஷ் பதவி ஏற்க செய்ய வேண்டும் அல்லது புதியதாக அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று இந்து சமய அறநிலை துறை உயர் அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் கடந்த ஜுலை மாதம் 13-ந் தேதி அன்று சிவகங்கை இந்து சமய அறநிலையதுறையின் நகை சரிபார்க்கும் துணை கமிஷனரான செல்வி கூடுதல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அவர் இந்து சமய அறநிலைய துறையின் நகை சரிபார்க்கும் பணியும், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பணியையும் கடந்த ஒரு மாதமாக பார்த்து வந்த நிலையிலும், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு என்று துணை கமிஷனர் நியமிக்கப்பட வேண்டும் என்று இந்து அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு என்று ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருந்த சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலின் துணை கமிஷனராக பணியாற்றி வந்த செ.சுரேஷின் பணி இடம் மாற்றத்தை ரத்து செய்ததாக நேற்று இந்துசமய அறநிலையத்துறை கமிஷனர் அறிவித்துள்ளார்.
மேலும் கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வந்த அதிகாரி செல்வியை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு துணை கமிஷனர் என்று தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் இன்று அல்லது இரண்டொரு நாளில் பதவி ஏற்பார் என்று தெரிகிறது.
2-வது முறையாக பெண் அதிகாரி:
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு என்று கடந்த 2017- ல்முதல் முறையாக பெண் அதிகாரியாக கவிதா பிரியதர்ஷினி நியமிக்கப் பட்டார். இந்த நிலையில் தற்போது (2026 – ல்) இந்த கோவிலுக்கு துணை கமிஷனர் பதவிக்கு 2-வது முறையாக பெண் அதிகாரி செல்வி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.