மதுரை திருமங்கலம் அருகே குளிர்பானங்கள் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து.!

மதுரை திருமங்கலம் அருகே குளிர்பானங்கள் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து.!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நகரி பகுதியில் இருந்து குளிர்பானங்கள் ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி சென்றது. நான்கு வழி சாலையில் திருமங்கலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போது கூத்தியார்குண்டு பகுதியில் மற்றொரு லாரியை முந்தி செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரின் மீது மோதி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். லாரியில் இருந்த குளிர்பானங்கள் நான்கு வழிச்சாலையின் சிதறிக்கிடந்தன.

இந்த விபத்தால் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மீட்புக்குழுவினரும் விரைந்து வந்து காயமடைந்த ஓட்டுநரை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!