
மதுரை கண்மாயில் பட்டப்பகலில் மண் திருட்டு… விவசாயிகள் புகார்.!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாயில் முறைகேடாக மண் அள்ளி விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது
கூத்தியார்குண்டு கிராமம். இங்கு பொதுப்பணி துறையின் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் நிலையூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாய்க்கு மழை காலங்களில் நிலையூர் கால்வாய் மூலம் நீர்வரத்து இருக்கும். தற்போது தண்ணீர் இல்லாமல் கண்மாய் வறண்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய பணிகளுக்கு கண் மாய்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவச அனுமதி கொடுத்தது. விவசாய பணிகளுக்கு வண்டல் மண் அள்ள விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் உள்ளிட்டவற்றுடன் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண்டும். பின் அந்தந்த தாலுகா தாசில்தாரின் ஒப்புதல் பெற்று குறிப்பிட்ட கண்மாயில் தங்களது சொந்த செலவில் புஞ்சை நிலம் எனில் ஏக்கருக்கு 90 கனமீட்டர் வரையும், நஞ்சை நிலம் எனில் ஏக்கருக்கு 70 கனமீட்டர் வரையும் வண்டல் மண் எடுக்கலாம். அதுவும் டிராக்டர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்
என்ற கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது.




இந்த நிலையில், ஆளும்கட்சி நிர்வாகிகள்
துணையோடு எவ்வித அனுமதியும் பெறாமல் பட்டப்பகலில் பொக்லைன்
இயந்திரம் மூலம் பல அடி ஆழத்திற்கு மண் அள்ளி டிராக்டரில் கடத்தி வந்தனர். இதுகுறித்து கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம் புகார் அளித்தனர்.
பின்னர் தகவலறிந்து மண் அள்ளும் இடத்திற்கு வந்த காவல்துறையினர், நிலையூர் கிராம் நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தாரும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இது நீர்ப்பிடி பட்டா உள்ள பகுதி மேலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய் இதில் முறையான அனுமதி இன்றி தனிநபர் மண் அள்ள அனுமதியில்லை என கூறி மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகாரிகள் ஆதரவோடு மண் திருட்டா? என பட்டப்பகலில் நடைபெறும் மண் கொள்ளையை தட்டிக்கேட்ட விவசாயிகள் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இக்கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.