
அதிகாரம் மாவட்ட செயலாளருக்கா..? மக்கள் பிரதிநிதிக்கா..? திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு.!
தமிழ்நாட்டில் த.வெ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்து ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் மூன்று மாதம் நிறைவடையவுள்ளது. இந்த காலகட்டத்தில், பாலியல் புகார், போதைப்பொருள் கடத்தல், ரீல்ஸ் சர்ச்சை என த.வெ.க நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அணிவகுத்துள்ளன.
‘முதல்வர் விஜயால் கீழ்மட்ட அளவில் கட்சியினரைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என, அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை அக்கட்சி நிர்வாகிகள் மறுக்கின்றனர். ‘ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த கட்சியைக் குறைகூற முடியாது’ என அவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு த.வெ.க தலைமையில் கூட்டணி ஆட்சி உருவானது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் மண்டல வாரியாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஒன்றை த.வெ.க தலைவர் விஜய் அமைத்திருந்தார்.
‘குழுவின் மூலம் கட்சியின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனவும் விஜய் எச்சரித்திருந்தார்.
மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் தலா ஒரு பெண் உள்பட நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், ‘ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு கட்சி நிர்வாகிகள் மீது இந்தக் குழுக்கள் போதிய கவனம் செலுத்தவில்லை’ என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

“தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. விஜய், விசில் ஆகிய இரண்டை சுற்றித்தான் அதன் அரசியல் அமைந்துள்ளது”
“காட்சிசார் அரசியல் மட்டுமே நடக்கிறது. ஆகவே, த.வெ.கவினருக்கு அரசியல்ரீதியாக எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை” என பல்வேறு அரசியல் விமர்ச்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இப்படிப் பட்ட சூழலில் திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நகராட்சி நிர்வாக இயக்குனரகம் திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் ரூபாய் 74.89 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்ட பணிகள் கடந்த 04.08. 2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் அவர்கள் அரசின் விதிமுறைகளை மீறி தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் தர்மராஜ் அவர்களை வைத்து அடிக்கல் நாட்டியது ஆளும் அரசுக்கு மிகப்பெரிய நிர்வாக சீர்கேடு ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பொதுமக்களும் எதிர்க்கட்சியை சார்ந்தவர்களும் தங்களுடைய கண்டனத்தை ஆளும் அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் தவெக மாவட்ட செயலாளர் தர்மராஜ் அவர்களுக்கு விஐபி இருக்கை வழங்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ரா. அய்யனார் MLA அவர்கள் இருக்கிறாரா? அல்லது புறக்கணிக்கப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் அவர்கள் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் தர்மராஜ் அவர்களுக்கு அரசின் விதிமுறைகளை மீறி முன்னுரிமை அளிப்பது எந்த ஆதாயத்திற்காக என சந்தேகம் எழுந்துள்ளது.
இது போக அரசு ஒப்பந்த பணிகளும் மாவட்ட செயலாளர் தர்மராஜ் கை காட்டும் திமுக ஒப்பந்தக்காரர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்படுவதாக கூறி தவெக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் தர்மராஜ் இந்த மூன்று நபர்களுக்குள் என்ன தொடர்பு உள்ளது என்று பொது மக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களைத் தாண்டி தவெக நிர்வாகிகளும், தொண்டர்களுமே கேள்வி எழுப்புகின்றனர்.
அரசு அதிகாரிகளுக்கு இணையாக தவெக கட்சி நிர்வாகிகள் செயல்படுவது அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி அடுத்தடுத்து அரசு நிர்வாக செயல்பாடுகளில் தவெக நிர்வாகிகள் அமர்ந்து இடையூறு ஏற்படுத்துவது. ரீல்ஸ் மோகத்தில் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற நிகழ்வுகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைமை இதற்கு நடவடிக்கை எடுக்குமா.? என பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.