
ஒரு பொன்னாடைக்காக இப்படியா.! சு.வெங்கடேசன் எம்.பி-க்கு கேள்வி..?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று (செப் 17) மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது; மதுரையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால், விழாக்கோலம் பூண்டுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்கு பின், இன்று (செப் 17) கோலாகலமாக நடைபெற்றது. காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்; கும்பாபிஷேகத்தை தரிசிக்க 9,000 பேர் கோவில் மேல் தளத்தில் அனுமதிக்கப்பட்டனர்; காலை, 10:00 மணிக்கு மேல் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு, 10:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு வரை கோவிலை சுற்றியுள்ள சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கும், நிறுத்துவதற்கும் அனுமதி இல்லை. மதுரை நகருக்குள் சரக்கு, கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.
புனித நீர்!
காசியில் இருந்து 1,008 லிட்டர் கங்கை புனித நீரும், 7 புண்ணிய நதிகளில் இருந்து 1,008 லிட்டர் புனித நீரும் கொண்டு வரப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. 12 கோபுரங்களிலுள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மதுரையில் குவிந்த பக்தர்கள் பக்தி பரவசத்தோடு மீனாட்சி அம்மனை வழிப்பட்டனர்.

இதற்கு இடையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோயில் முன்பு தமிழ் வேள்வியாளர்கள் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களோடு அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுவார்த்தை நடத்தி கோயிலுக்குள் அனுமதிப்பதாக உறுதி அளித்தார். இதுதவிர தமிழில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் நடப்பதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும், தமிழ் வேள்வியாளர்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள் மூலம் தமிழில் மந்திரங்கள் ஓதி வேள்வி நடத்த வேண்டும். யாகசாலை, குடமுழுக்கு, கருவறையில் தமிழில் வேள்விகள் நடத்த வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவையினர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழில் வேள்வி நடத்த வேண்டும் எனவும், தமிழில் வேள்வி நடத்துவதை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறத்தி சென்னை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் தெய்வத்தமிழ் பேரவையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், கவுதமன், சத்தியபாமா, தமிழ்மணி, காயத்ரி அடங்கிய தமிழ் வேள்வியாளர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரையை சந்திக்க அனுமதி அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி இவர்கள் நேற்று அம்மன் சந்நிதி வழியாக கோயிலுக்குள் செல்ல காவல் துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் மறுப்புத் தெரிவித்தனர். இதனால் கோயில் முன்பு சத்தியபாமா தலைமையில் தமிழ் வேள்வியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு இவர்களோடு அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். கோயிலுக்குள் செல்ல அனுமதி பெற்றுத் தரப்படும் என தெரிவித்தார்.
தமிழ் ஓதுவார்கள்: இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை பார்வையிட்ட பிறகு அமைச்சர் ரமேஷ் கூறியது: குடமுழுக்கு விழாவில் தமிழில் பாராயணம் செய்வதற்கு தமிழகம் முழுவதும் இருந்து 27 ஓதுவார்களை நியமித்துள்ளோம். முதல்வர் எப்போதும் தமிழை முன்னிறுத்தக் கூடியவர். தவெக ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். அதன்படி கடந்த 11-ம் தேதியிலிருந்து ஓதுவார்கள் தமிழில் மந்திரங்கள் ஓதி வருகின்றனர். தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் யாரும் போராட்டம் செய்யவில்லை. அவர்கள் யாகசாலையில் பணியாற்றுகின்றனர். கோபுரக் கலசத்தில் நீர் ஊற்றவும், கருவறைக்குள் சென்று குடமுழுக்கு செய்யவும் தமிழ் ஓதுவார்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு கூறினார்.
அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்களைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு எத்தகைய ஆதரவு தேவை என்பதை இணை ஆணையர் மூலம் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வோம். குடமுழுக்கு விழா பாஸ் தொடர்பாக பல தவறான தகவல்கள் வருகின்றன. இதுவரை நான் ‘பாஸ்’களை கண்ணால்கூட பார்க்கவில்லை. அதில் நான் தலையிடவே இல்லை. கோயில் நிர்வாகம் இணை ஆணையர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதில் நான் தலையிடவில்லை. சிட்டிங் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு கோயில் நடைமுறைப்படி பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓதுவார்களின் சைவத்தமிழ் கோபுரமெங்கும் முழங்க, தவத்திரு குன்றக்குடி அடிகளாரோடு திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு விழாவில்…
என்று படத்துடன் நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ( Su.Venkatesan MP ) அவர்கள் தமது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எந்தவொரு சைவக் கோயில்களிலும் ஓதுவார்கள் பண்ணிசை பாடுவது வழக்கமான ஒன்று. ஓதுவார்களுக்கு பாடத் தெரியுமே தவிர, தமிழ் மந்திரங்கள் தெரியாது. இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழ் மந்திர பயிற்சி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் அர்ச்சகர்களுக்கு தமிழ் மந்திரப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், குட முழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓதக் கூடிய வேள்வியாளர்களும் வெளியே நிறைய உள்ளனர்.
பயிற்சி பெற்ற தமிழ் மந்திர அர்ச்சகர்களையோ, தமிழ் வேள்வியாளர்களையோ மீனாட்சியம்மன் கோயில் குட முழுக்கில் அமர்த்தப்பட வில்லை என்பதுதான் உண்மை.
கோயில்களில் பாடும் ஓதுவார்களுக்குக் கூட சிவாச்சாரியார்களுக்கு சமமான எண்ணிக்கையில், இடம் தர வில்லை. சிவாச்சாரியார்கள் சமஸ்கிருதத்தில் ஓதும் போது, சம நேர அளவில் ஓதுவார்களை தமிழ்ப் பாடல்களை பாடவும் அனுமதிக்க வில்லை.
ஒரே ஒரு சைவ ஓதுவாரை கோபுரத்தில் ஏற்றி ஒப்புக்கு பாட விட்டார்களே தவிர, கலசத்தில் நீர் ஊற்ற அனுமதிக்க வில்லை என்பது சு.வெங்கடேசனுக்கு தெரியுமா? தெரியாதா?
உயர் நீதி மன்றம் கூறிய படி வேள்விச் சாலை, கருவறை , கோபுர கலசத்தில் வேள்வியாளர்களால் தமிழ் மந்திரங்கள் ஒலிக்க வில்லை என்பது தெரியுமா? தெரியாதா?
ஒரு பொன்னாடை பாராட்டுக்காக
உண்மையை மூடி மறைக்கலாமோ?
மேடை தோறும் கீழடியின் தமிழ் வரலாறு, மதுரையில் தமிழ் வளர்ந்த வரலாறு, பெருமாள் கோயில்களில், தமிழ் முன்னே போகும், பெருமாள் பின்னே போவார் என்றெல்லாம் பேசக் கூடியவர்தான் சு.வெங்கடேசன்.
ஆனால்…. பாண்டியர்கள் தமிழ் வளர்த்த மதுரையில், பாண்டியர் குலப் பேரரசி
மீனாட்சி பேசிய தமிழ் மொழியில்,
மந்திரங்கள் ஓதப்படவில்லை
என்பதை விளக்கி ஒரு விரிவான அறிக்கை தரவோ, முக நூலில் எழுதவோ
ஏன் சு.வெங்கடேசன் அவர்களால் முடிய வில்லை? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- க
- த
- ம
- ச
- ச
- ப
- ப
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.