
திருப்பரங்குன்றத்தில் நிச்சயமாக உதயசூரியன் உதித்தாக வேண்டும்! விறு விறு வாக்கு சேகரிப்பில் கிருத்திகா தங்கபாண்டியன்!
தமிழ்நாட்டிலேயே முன்மாதிரியான தொகுதியாக திருப்பரங்குன்றம் தொகுதியை கொண்டு வருவேன்-திருப்பரங்குன்றத்தில் அதிமுக -திமுக நேரடி போட்டி எனவே திமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியன் பேச்சு!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் கிருத்திகா தங்கபாண்டியன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் திருப்பரங்குன்றம் ஒன்றியம் பகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று ஐராவதநல்லூர், பெரிய காதியனூர் அந்தோணியார் கோவில் தெரு மந்தையம்மன் கோவில் தெரு, அனுப்பானடி இபி ஆபிஸ் உள்ளிட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் வேட்பாளருக்கு பட்டாசு வெடிப்பு, மேளதாளங்கள், கலர் பேப்பர், ஆள் உயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர் கிருத்திகா பேசும் போது: நடந்து கொண்டிருப்பது பெண்களுக்கான ஆட்சி பெண்களின் வளர்ச்சி முன்னேற்றம் அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை முதல்வர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். முதல்வரின் திட்டங்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக உள்ளது. கண்டிப்பா வெற்றி உடன் தான் வர வேண்டும் என்று நம்முடைய முதல்வர் கூறினார். மக்களிடத்தில் திமுக வாக்குறுதிகள் எடுத்து கூறுங்கள் என்றார். நான் திருப்பரங்குன்றம் முழுவதும் வாக்கு கேட்டுப் போகும் போது மிகப் பெரிய வரவேற்பைப் அளிக்கின்றனர். நம்ம வீட்டில் சின்ன டிவி இருக்கிறது என்றால் கூப்பனை வைத்து பெரிய டிவி வாங்கிக் கொள்ளலாம். மக்களின் சவுரியத்திற்கு ஏற்றார் போல் வாக்குறுதிகள் கொடுக்கின்றனர். திருப்பரங்குன்றத்தில் நிச்சயமாக உதயசூரியன் உதித்தாக வேண்டும் பெருவாரியான வாக்கு வித்தியாசங்களில் வெற்றி பெற வேண்டும்.

கல்லம்பல் சாலை போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் வண்டியூர் சாலையில் தார் சாலை அமைக்கப்படும் ஐராவதநல்லூரில் தலைவர் கலைஞர் பெயரில் சமுதாயக்கூடம் அமைக்கப்படும். நடைபயிற்சி பூங்கா, இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்படும். தெப்பக்குளம் ஆர்ச் அருகே மீண்டும் பஸ் நிறுத்தம் அமைக்கப்படும் என்று வாக்குறுதிகளை கூறியவுடன் பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர், உடனே வேட்பாளர் இப்போதான் உங்கள் முகத்தில் சந்தோஷத்தை பார்க்கிறேன் இதெல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றி தருவேன் என்ற வாக்குறுதியை உங்களுக்கு அளிக்கிறேன். இந்த முறை அதிமுக VS திமுக என திமுக நேரடியாக களம் காண்கின்றது. நாம் நேரடி களத்தில் உள்ளோம் எனவே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் முன்மாதிரி தொகுதியாக திருப்பரங்குன்றத்தை கொண்டு வருவேன். திருப்பரங்குன்றத்தில் மக்களில் கோரிக்கை அடிப்படை தேவைகளாக மட்டுமே உள்ளது அடுத்த கட்டத்திற்கு போகவில்லை நான் வெற்றி பெற்றால் அதை நிச்சயமாக மாற்றுவேன் என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.