மருத்துவமனைக்குள் புகுந்த நல்ல பாம்பைக் கண்டு சாமியாடிய பெண்…!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே மருத்துவமனை வளாகத்தில் புகுந்த நல்ல பாம்பை கண்டு பெண்மணி சாமியாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் அதிகாலை முதல் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கனமழை பெய்து வந்தது இதையடுத்து நேற்று காலை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி முனியாண்டிபுறத்தில் அமைந்துள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதை அறிந்த மருத்துவமனை அலுவலர்கள் பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபு அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார். அப்போது, அங்கே கூடியிருந்த கூட்டத்தில் பெண் ஒருவர் திடீரென உணர்ச்சிப் பெருக்கில் குலவை இட்டு சாமி வந்ததைப் போன்று ஆடி சத்தம் எழுப்பினார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பாம்பை பயபக்தியுடன் வேடிக்கை பார்த்தனர். பின்னர் சாக்குப் பையன் அடைக்கப்பட்ட நல்லபாம்பை நாகமலை புதுக்கோட்டை வனப்பகுதிக்குள் விடுவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.