கொரோனா பெருந்தொற்று காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்கள் இலவச அழைப்புகள் மேற்கொள்ளும் வகையில் அதிரடி சலுகையை ஜியோ அறிவித்துள்ளது.
கொரோனா காலம் என்பதால் பணம் இல்லாமல் ரீச்சார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு கொரோனா காலம் முழுவதும் மாதம் 300 நிமிடங்கள் அவுட்கோயிங் கால்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.அதோடு, ஜியோபோன்களுக்கு 75 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தாலும், கூடுதலாக 75 ரூபாய்க்கு பயன்கள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் எனவும் ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதில், வருடாந்தர திட்டங்களுக்கு (Annual plans) ரீச்சார்ஜ் செய்தவர்களுக்கு கொரோனா கால சலுகைகள் பொருந்தாது எனவும் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு இந்தியனுக்கும் டிஜிட்டல் வாழ்க்கை சாத்தியமாக வேண்டும் என்ற இலக்குடன் ஜியோபோன் தொடங்கப்பட்டது. இந்த நெருக்கடியான கொரோனா காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் குறிப்பாக சமுதாயத்தின் கடைநிலையில் இருப்பவர்கள், தொலைதொடர்பில் இணைந்திருப்பதும், மலிவாக அது கிடைப்பதையும் ரிலையன்ஸ் உறுதி செய்கிறது.