கன்னியாகுமரி கடலில் சூறாவளி காற்று வீசியதால் நேற்று முழுவதும் படகுசேவை ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி கடலில் நிலவும் வழிமண்டல சுழற்சி காரணமாக மூன்று நாட்களுக்கு சூறாவளி காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதலே சூறாவளி காற்று வீசி வருகிறது.இதனால் கன்னியாகுமரி பகுதியில் பல இடங்களில் வாழை,தென்னை மற்றும் முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தது.சூறாவளி காற்று காரணமாக மின்தடை ஏற்றப்பட்டது.
கன்னியாகுமரி கடலில் கடுமையாக சூறாவளி காற்று வீசியதால் சுற்றுலா பயணிகள் படகுஇயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.இதனையடுத்து பாதுகாப்பு கருதி நேற்று முழுவதும் படகுசேவை ரத்து செய்யப்பட்டது.இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.