தமிழக அரசின் மூலம் அனைத்து துறைகளின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை பேரூராட்சி, புதுக்கடை பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக, புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், கூறியதாவது:

தமிழக அரசு ஏழை எளிய கிராமபுற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கால்நடைத்துறை மூலம் விவசாயிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள், நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழை பெண்களின் கல்வியை உயர்த்துவதற்கு சமூக நலத்துறையின் மூலம் பட்டதாரி அல்லாதவர்களுக்கு திருமணத்திற்கு திருமண நிதியுதியாக ரூ.25 ஆயிரமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு திருமணத்திற்கு திருமண நிதியுதவியாக ரூ.50 ஆயிரமும், தாலிக்கு தங்கம் வழங்கிய திட்டங்கள் குறித்தும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மக்கள் நல வாழ்வுத்துறை மூலம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நிதியுதவி மகப்பேறு திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பசுமை வீடுகள் வழங்கும் திட்டம் குறித்தும், பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சீருடைகள், பாடப்புத்தகங்கள், வண்ண பென்சில்கள், கணித உபகரணங்கள் 14 வகையிலான கல்வி உபகாரணங்கள் குறித்தும், வீட்டின் அருகிலிருந்து பள்ளிக்கு செல்வதற்கு ஏதுவாக விலையில்லா மிதிவண்டிகள், கல்வியில் சிறந்து விளங்கவும், உயர்கல்வி பெற செய்வதற்கும், பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் குறித்தும், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, பண்ணை பசுமை காய்கறி நுகர்வோர் திட்டம், விலையில்லா சானிட்டரி, நாப்கின் வழங்கும் திட்டம் குறித்தும், திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் குறித்தும், அம்மா சிமெண்ட், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், வருவாய்த்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் உழவர் பாதுகாப்பு திட்டம், மக்களை தேடி தமிழக அரசு என்ற சிறப்பான திட்டத்தில் ஒன்றான அம்மா திட்டம், பிறந்த குழந்தைகளுக்கு தேவைப்படும் 16 வகையான பொருட்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் ஆகிய திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார்.

Leave a Reply

error: Content is protected !!