மதுரை: கொரோனா வைரஸ் தொற்றால் மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தோப்பூரில் அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துவிட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டிவிட்டது.
சாமானியர் முதல் பணக்கார்கள் வரை பலருக்கு கொரோனா வந்துள்ளது. இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். சிலர் மரணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் மதுரை எம்பி சு. வெங்கடேசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தோப்பூரில் அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.