
தமிழகம் முழுவதும் ஏப்ரல் மே மாதங்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக மீன்பிடி தடைகாலம் அரசால் அறிவிக்கப்பட்டாலும் நாட்டு படகு மற்றும் வல்லம் ஆகியவைகளில் கரையோரங்களில் பிடிக்கும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
மீன்களை வாங்கி வரக்கூடிய மீன் வியாபாரிகள் கெட்டுப்போன அழுகிய மீன்களை தேக்கி ஐஸ் வைத்து மீண்டும் மீண்டும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து விற்பனை செய்வதால் இதனை வாங்கிச் செல்லும் முதியவர்கள் குழந்தைகள் உடல் உபாதைகளுக்கு ஆளாக்கப்பட்டு கடுமையான நோய் தொற்று ஏற்பட்டு கடும் அவதி அடைந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர் பொதுமக்கள் தெரிவித்த புகாரை தொடர்ந்து
ராமநாதபுரம் அருகே ராம் நகர் பகுதியில் உள்ள மீன் கடைகளில் ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் மீன் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அதில் கெட்டுப்போன அழுகிய மீன்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை விசாரணை செய்து அவர்களிடமிருந்து சுமார் 30 கிலோவுக்கு மேற்பட்ட மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர் அதன் பின்பு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அபராதம் விதிக்கப்பட்டது.
இது போன்ற கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் மீது காவல்துறை வசம் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்

மேலும் மாவட்டம் முழுவதும் இந்த சோதனை தொடரும் எனவும் மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்வது மற்றும் கெட்டுப்போன பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்தனர்
உணவுத்துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இரு துறை அதிகாரிகளும் இணைந்து ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.