இந்தியத் திரைப்படத்தின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான R.வேல்ராஜ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த கூத்தியார்குண்டு எனும் சிற்றூரில் 1969 அக்டோபர் 21 ம் தேதியில் பிறந்தார்..

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் வேல்ராஜ். ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் அறிமுகமான இவர் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து தனுஷ் – சமந்தா நடித்த தங்கமகன் படத்தையும் இயக்கிய இவர், அசுரன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை உள்ளிட்ட அனைத்து படங்களுக்கும் வேல்ராஜ் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது பிறந்த நாளான இன்று சமூக வலைதளங்களில் திரைத்துறை பிரபலங்கள் , அரசியல் பிரமுகர்கள் ,கலைத்துறை ரசிகர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.அந்த வரிசையில்
லெமூரியா நியூஸ் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் பெருமை அடைகிறது.