
கடவுளை கூட விட்டு வைக்காத அரசு… கள்ளழகர் தான் காப்பாத்தனும்… பாராளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு!
அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். புனித ஸ்தலங்களை கூட பாஜகவினர் விட்டு வைக்காத நிலை தொடர்கிறது. வேதாந்தாவிற்கு உதவுவதற்காக கடவுளை கூட விடாதவர்களாக மோடி, பாஜகவினர் மாறியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கள்ளழகரும், பதினெட்டாம்படி கருப்பும், முருகனும் தான் காப்பாற்ற வேண்டும். -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
மதுரை திருநகரில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
மதுரை அரிட்டாபட்டி அருகே டங்ஸ்டன் கனிம சுரங்கம் வந்தால் அரிட்டாப்பட்டியின் தமிழ் வரலாற்றையும் அழகர் கோவிலையும், பழமுதிர்ச்சோலைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். புனித ஸ்தலங்களை கூட பாஜகவினர் விட்டு வைக்காத நிலை தொடர்கிறது. வேதாந்தாவிற்கு உதவுவதற்காக கடவுளை கூட விடாதவர்களாக மோடி, பாஜகவினர் மாறியிருக்கிறார்கள். அவர்களுக்கு நெருங்கியவர்களுக்காக அள்ளிக் கொடுக்கின்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக வருகிற 25-ம் தேதி தொடங்கவிருக்கும் குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் குரல் கொடுப்போம். இந்தியா கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த மக்கள் விரோதம் முடிவையும், மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கின்ற மோடி அரசை கண்டித்து குரல் கொடுப்போம். மக்களுக்காக என்று சொல்கின்ற அவர்களிடமிருந்து இந்த கள்ளழகரும், பதினெட்டாம்படி கருப்பும், முருகனும் தான் காப்பாற்ற வேண்டும்.
மதுரை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் சின்ன உடைப்பு விவகாரம் குறித்த கேள்விக்கு:
எட்டு ஆண்டுகளாக அதிமுக காலத்தில் எதுவும் செய்யாததால்தான் விமான நிலைய விரிவாக்கத்தில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. மதுரை விமான நிலையத்தின் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது, சின்ன உடைப்பு மக்களின் நியாயமான கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற வகையில் உயர் நீதிமன்ற தீர்ப்பு இருக்கும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. நியாயமாக மதுரைக்கு வர வேண்டிய திட்டங்களை தடுப்பதற்கு மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. உயர்நீதிமன்ற வழக்கில் உள்ளது என்று மத்திய அரசு மகிழ்ச்சியாக சொல்லும். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் விமான நிலைய விரிவாக்கம் குறித்து முடிவெடுக்க முடியாது என கூறுவார்கள்.
மதுரை விமான நிலைய 24 மணி நேர சேவை குறித்த கேள்விக்கு:
வருகிற குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அமைச்சரை சந்தித்து நிச்சயம் வலியுறுத்துவேன். 24 மணி நேர சேவை கொடுத்ததற்கு நன்றி, ஆனால் அது பேரழகில் மட்டும் இல்லாமல் 24 மணி நேரம் விமானங்கள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்துவேன்.
சூரிய மின்சக்தி விவகாரம் குறித்த கேள்விக்கு:
ராகுல் காந்தி டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து அதானி விவகாரம் தொடர்பாக முழுமையாக சொல்வார். பாராளுமன்ற கூட்டுக்குழு வரவேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை. அனைவருக்கும் தெரிந்த உண்மை ஆனால் அதை மறைப்பதற்கு மோடி மட்டும் முயற்சி செய்து வருகிறார். அதானி மற்றும் அவரைப் போன்ற பெரும் பணக்காரர்களை காப்பாற்றுவதற்கான அரசாக இந்த அரசு செயல்படுகிறது. அதானியாக இருந்தாலும் சரி, வேதாந்தாவாக இருந்தாலும் சரி இவர்களை காக்கின்ற அரசாங்கம் இந்த அரசு இருக்கிறது.
கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதாக இலங்கை அரசு முடிவு எடுப்பது குறித்த கேள்விக்கு:
வருகிற பாராளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்பிக்கள் இது தொடர்பாக குரல் எழுப்ப இருக்கிறோம். எம்பி விஜய் வசந்த் மற்றும் சுதா அவர்களுடன் இணைந்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவோம். எங்களைப் பொறுத்தளவில் இது மிக முக்கியமான பிரச்சனை, மத்திய அரசு மிகத் தெளிவான முடிவெடுக்க வேண்டும் என்பது எங்கள் கேள்வியாக இருக்கும் எனக் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.