மதுரை தனியார் ஹோட்டலில் மதுபானம் கொண்டு கேக் தயாரிப்பு..

மதுரை தனியார் ஹோட்டலில் மதுபானம் கொண்டு கேக் தயாரிப்பு..

அமைதி சகோதரத்துவம் மற்றும் வளமுடன்”கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு ” விழாக்களை கொண்டாட பாரம்பரிய ஐரோப்பிய முறையில் உலர் பழ கேக் தயாரிப்பு நிகழ்ச்சி மதுரை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

50 கிலோ உலர் பழங்கள், பாதம், முந்திரி, பருப்புகள் கொண்டு 25 லிட்டர் மதுபானங்கள் கொண்டு 100 கிலோ கேக் தயாரிக்க அமிக்கா முதன்மை சமையல் கலைஞர் கோபி விருமாண்டி குழுவினர்.

ஒய் டபுள் சிஏ மாணவர்களின் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பாடல்களுடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் பேண்ட் இசை முழகத்துடன் கேக் தயாரிக்கும் கண்கவர் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுகளை கொண்டாட பாரம்பரிய அறுவடை திருவிழா என ( கார்னிவல் பெஸ்டிவல் ) கொண்டாடப்படுவது வழக்கம்.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை அமைதி, சகோதரத்தும் மற்றும் உலக நலத்துடன் கொண்டாட்டங்களுக்காக உலகம் முழுவது கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக திராட்சை, ஸ்ராபெரி, முந்திரி , டூட்டி புருட்டி, பிஸ்தா, வால்நட் , உள்ளிட்ட உலர் பழங்கள் 50 கிலோ அளவில் கொண்டு கிறிஸ்மஸ் சின்னங்கள் ஓவியங்களாக மேஜையில் அலங்காரிக்கப்பட்டு அதன் மேல் உயர் ரக மதுபானங்கள் (ஒயின், விஸ்கி, பிரண்டி, ரம், ஸ்காட்ச்) 25 லிட்டர் கலக்கப்படும்.

பின்னர் இந்த உலர் பழக்கலவை 20 நாட்களுக்கு மூடி வைக்கப்பட்டு பக்குவபடுத்தட்டும்.

பின்னர் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் தயார் செய்யப்படும் கேக் உடன் உலர் பழங்கள் கலக்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது .

பாரம்பரிய ஐரோப்பிய திருவிழா கேக் தயாரிக்கும் முறையினை மதுரை சுற்றுச்சாலையில் உள்ள அமிக்கா ஹோட்டலில் நடைபெற்றது.

முதன்மை சமயற்கலைஞர் கோபி விருமாண்டி
தலைமையிலான 30க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களால் கிறிஸ்மஸ் கேக் தயாரிக்க தேவையான 50 கிலோ உலர் பழங்கள் மேஜையில் தயார் செய்து பார்வையாளர்களை கவரும் வண்ணம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

பேண்ட் இசை முழங்க சமையல் கலைஞர்கள் ஊழியர்கள் மதுபானங்களை பேரல் மூலம் கொண்டு வந்து மேஜையில் திறந்து விட்டனர்.

அலங்கரிக்கப்பட்ட உலர்பழங்களின் நடுவே பரிசுப் பொருட்கள் ஒளித்து வைக்கப்பட்டது.

கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் சுரேஷ் , ரேடியோ சிட்டி ஜாக்ஸன் துரை,மற்றும் ரோஸ் அன் கிராஸ்
மற்றும் YWCA பள்ளி மாணவ, மாணவிகளுடன் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பாடல்கள் பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

உலர்பழங்களின் நடுவே பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டதனை கண்டுபிடிக்கும் போட்டியாளருக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாங்கட்டங்களுக்காக Y .W.C.A பள்ளி மாணவர்களின் பாரம்பரிய பாடல்கள் உடன் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!