கோவை அருகே லாரி மோதி அரசு பஸ் கவிழ்ந்து விபத்து பதறகவக்கும் CCTV காட்சிகள்

கோவை அருகே லாரி மோதி அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி நேற்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 
அப்போது அந்த பேருந்து, சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் சென்ற போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த சரக்கு ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. 
லாரி மோதிய வேகத்தில் அரசு பஸ் சாலையோரம் இருந்த கடையின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!