தமிழ்நாட்டில் பிச்சை எடுக்கக்கூட தமிழர்களுக்கு உரிமையில்லை.? தமிழில் பேசி பிச்சை எடுத்தவரை கொடூரமாக தாக்கி கொலை செய்த வடநாட்டு பிச்சைக்காரன்.

தமிழில் பேசி பிச்சை எடுத்தவரை வடநாட்டு பிச்சைக்காரன் கட்டையால் அடித்துக் கொலை!

நாகர்கோயிலில் தமிழில் பேசி பிச்சைகாரர் ஒருவர் பிச்சை எடுத்துள்ளார். ஜார்கண்ட் மாநில பிச்சைக்காரரும் போட்டி போட்டுக் கொண்டு உடன் சென்றுள்ளார்.

தமிழ்நாட்டு பிச்சைக்காரருக்கு 2 ரூபாய் பிச்சை கிடைத்துள்ளது. ‘யாராவது ஒருவருக்குதான் பிச்சை போட முடியும்’ என்று கூறிய கடை உரிமையாளர் ஜார்கண்ட் மாநில பிச்சைக்காரரை விரட்டி விட்டுள்ளார்.

இதனால், ஜார்கண்ட் மாநில பிச்சைகாரர் தமிழ்நாட்டு பிச்சைக்காரருக்கு கிடைத்த 2 ரூபாயில் தனக்கு 1 ரூபாயை தர வேண்டுமென்று கேட்டுள்ளார். தமிழ்நாட்டு பிச்சைக்காரர் கொடுக்க மறுத்துவிட்டு அடுத்த கடைக்கு சென்றுள்ளார்.அப்போது அவரை பின் தொடர்ந்த ஜார்கண்ட் மாநில பிச்சைக்காரன் தமிழில் பேசி பிச்சை எடுத்தவரை உருட்டுக்கட்டையால் தாக்கி, தமிழிலும், இந்தியிலும் கத்திக் கொண்டே ஓடியதை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் தன் கையிலிருந்த உருட்டுக்கட்டையால் தமிழ்நாட்டு பிச்சைக்காரரை அடித்து கீழே தள்ளினார்.
கீழே விழுந்த தமிழ்நாடு பிச்சைக்காரரை ஜார்கண்ட் பிச்சைக்காரர் உருட்டுக்கட்டையால் கொடூரமாகத் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கட்டையால் அடித்த வீடியோ காட்சி

நடுரோட்டில் ஏராளமான மக்கள் முன்னிலையிலேயே இந்த கொலை நடந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த வடசேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஜார்கண்ட் மாநிலத்தை பிச்சைக்காரரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!