புரெவி புயல் காரணமாக மதுரை விமான நிலையம் இன்று (04.12.2020) காலை முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்படுகிறது. 12மணி வரையிலான விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
12 மணிக்கு மேல் விமான சேவைகள் வழக்கம் போல் தொடரும் என விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறினார்.
எனவே பயணிகள் விமான நிலையம் வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதே போல் புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் இன்று முழுவதும் மூடப்படுவதாகவும் அறிவிப்பு. திருவனந்தபுரம் விமான நிலையமும் மூடப்படுவதாகவும் மதுரை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.