மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலவரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் எஸ்டிபி கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் நடைபெற்றது.
இதில் திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் சம்சுதீன் மற்றும் சைபுல்லாஹ் முன்னிலை வகித்தனர்.ட்ராவல்ஸ் ஆசிப் மற்றும் முகமது இப்ராஹிம் வரவேற்புரை கூறினர். மதுரை மாவட்ட .தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை வகித்தார் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிபிஐ கட்சி கொடியை ஏற்றி பள்ளி மாணவர்களுக்கான நோட்புக் வழங்கினார்.
மாநிலச் செயலாளர் அபூபக்கர் சித்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில் எஸ் டி பி ஐ கட்சி 20 மாநிலங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது 10 மாநிலங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியலமைப்பு கட்டமைப்புடன் உள்ளது. அனைத்து மக்களுக்கும் சமூக மற்றும் சம நீதி கொடுக்கக்கூடிய அரசியல் கட்சியாக கொள்கை முன்வைத்துள்ளது என அபுபக்கர் சித்திக் கூறினார்.
நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.