கப்பலூர் சிட்கோவில் தீவிபத்து… வெடித்து சிதறிய பேரல்கள்…3 மணிநேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்.

மதுரை கப்பலூர் தொழில்பேட்டையில் இயங்கி வரும் பெயிண்ட் மற்றும் காலணிகள் ஒட்ட பயன்படுத்தும் ரசாயன கலவை வைத்திருந்த (தின்னர்) குடோனில் தீ விபத்து.

மதுரை திருமங்கலம் கப்பலூர் தொழிற்பேட்டையில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. கப்பலூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மகளிர் தொழிற்பேட்டை பகுதியில்., ஆனையூரை சேர்ந்த முருகேசன் என்பவர் ரசாயன கலவை தின்னர் குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் தொழிற்சாலையில் தின்னர் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஊழியர்கள் திருமங்கலம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். திருமங்கலம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராணி தலைமையில் முதலில் 2 வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து தீயை அணைக்கும் பணியானது நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ரசனை கலவை வைக்கப்பட்டிருந்த பேரல்கள் சுமார் 24க்கும் மேற்பட்டது இருந்ததால் தீயானது மளமளவென தீ பற்றி எறிந்ததால் ஒவ்வொரு பேரருளும் வெடித்து சிதறியது.

தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்., தீயானது 2 மாடி கட்டிட அளவிற்கு மலமலவென தீப்பிடித்து எறிவதால் கூடுதலாக மதுரை பெரியார் மற்றும் அனுப்பனடி பகுதியில் உள்ள தீயணைப்பு நிலங்களிலிருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது

.

தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வரும்பொழுது ரசாயன கலவை பேரல் ஒன்று வெடித்து சிதறியதில் தீயணைப்பு வீரர்கள் பாலமுருகன்(42)., கார்த்திக் (36) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது ஒருவருக்கு லேசான தீக்காயங்கள் கையில் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மற்ற தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு தற்போது முதல் உதவி சிகிச்சை அளிக்க திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். தொடர்ந்து., சம்பவ இடத்திற்கு திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் மற்றும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி வினோத் மற்றும் உதவி அதிகாரி பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மதுரை விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தானியங்கி இயந்திரம் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் தீப்பிடித்தது எவ்வாறு என்பது குறித்து வழக்கு பதிவு செய்த திருமங்கலம் நகர் காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *