மதுரையில் கடன்தொல்லை மற்றும் வறுமை காரணமாக தான் வளர்த்த நாய்க்கு விஷம் கொடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை…

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அருண் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்ட நிலையில் அவரது மனைவி வளர்மதி (38) , மகள்கள் அகீதா (19) , ப்ரீத்தி (17) ஆகியோர் உறவினர்கள் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். கணவர் இறந்துவிட்டதால் வளர்மதி கடும் வறுமையில் கஷ்டப்பட்டு வந்துள்ளார், கடனும் இருந்துள்ளது. இந்நிலையில் கடன் மற்றும் வறுமையை சமாளிக்க முடியாமல் மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்கள் வளர்த்த நாய்க்கும் விஷம் கொடுத்ததால் நாயும் இறந்துவிட்டது.
வளர்மதி தனது வீட்டில் தம்பி மகள் மேகலாவை வளர்த்து வந்தார். தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன்னர் கீழே உள்ள வீட்டிற்கு மேகலாவை அனுப்பிவிட்டு இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு முன்னர் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை கடிதமாக எழுதி வைத்துவிட்டு, தங்களிடம் உள்ள நகை மற்றும் பணங்களை வீட்டில் வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த ஒத்தக்கடை காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

error: Content is protected !!