லாபத்தில் பங்கு தருவதாக கூறி மோசடி: ‘ஆர்.டி.எக்ஸ்’ தயாரிப்பாளர் மீது புகார்

மலையாளத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான படம், ‘ஆர்.டி.எக்ஸ்’.ஷேன் நிகாம், அந்தோணி வர்கீஸ், நீரஜ் மாதவ் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை நகாஸ்ஹிதயத் இயக்கிஇருந்தார். சாம்சி.எஸ். இசை அமைத்திருந்த இதைவீக்கெண்ட் பிளாக் பஸ்டர்ஸ் சார்பில்சோபியா பால், ஜேம்ஸ் பால் தயாரித்திருந்தனர். இந்தப் படம் கமர்சியல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் திருப்புனிதுரா பகுதியை சேர்ந்த அஞ்சனா ஆப்ரஹாம் என்பவர், இப்படத்துக்காக ரூ.6 கோடி முதலீடு செய்தததாகவும் லாபத்தில் 30 சதவிகிதம் சேர்த்து தருவதாகக் கூறிவிட்டு முதலீடு செய்த பணத்தை மட்டுமே திருப்பி தந்துள்ளதாகவும் லாபத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் போலீஸில் புகார் அளித்துள்ளார். ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படத்துக்கும் இதே போன்ற புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!