நடிகை வினோதினி நாம் தமிழர் கட்சியில் இணைகிறாரா? அவர் கிட்டயிருந்து அழைப்பு வந்ததா? இதோ பளிச் பதில்

நடிகை வினோதினி நாம் தமிழர் கட்சியில் இணைகிறாரா? அவர் கிட்டயிருந்து அழைப்பு வந்ததா? இதோ பளிச் பதில்

கடந்த வருடம் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த நடிகை வினோதினி, திடீரென அக்கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்..

இதற்கான காரணம் என்ன என்றுதான் இணையவாசிகள் மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல, வேறு கட்சியில் வினோதினி இணைவாரா? என்ற சந்தேகமும், ஆர்வமும் அவரது ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு வெளியான “எங்கேயும் எப்போதும்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வினோதினி வைத்தியநாதன்.. இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

அதேசமயம், எந்நேரமும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருபவர்.. இவரது பெரும்பாலான பதிவுகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தே இருப்பதால், இந்த பதிவுகள் அனைத்துமே வைரலாகி, மக்களின் கவனத்தை பெற்றுவிடும். இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த வருடம் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.

கட்சியில் இணைந்ததிலிருந்தே, மய்யத்திற்கு பெரும் ஆதரவாகவும், பலமாகவும் இருந்து வந்தார். தற்போது மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார்..

நம்மவர்: இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் விலகல் அறிக்கையை பதிவிட்டிருந்தார்.. அதில், “நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல,வினோதினியும்தான். தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம். தொடர்ந்து பயணிப்போம்” என்று கூறியிருந்தார்.

தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து இருப்பதாக வினோதினி பதிவிட்டிருந்தது, தற்போது வரை மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணி வருகிறது. அப்படியானால், கமல் கட்சியில் என்ன நடந்தது? வேறு கட்சிக்கு வினோதினி செல்ல போகிறாரா? போன்ற சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.

வினோதினி: இப்படிப்பட்ட சூழலில்தான் Kumudam யூடியூப் சேனலுக்கு வினோதினி பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில்,

விஜய் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்வதாக சொல்கிறார்கள்.. இப்போதுதான் அவர் களத்துக்கு வந்துள்ளார்.. ஆனால், அரசியல் களத்திலேயே கமல் இல்லையே? நீங்கள் நடிகர் விஜய் விஜய் கட்சியில் சேர போகிறீர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு வினோதினி, அந்த காரணம் எனக்கு தெரியாது, அந்த வருத்தம் எனக்கும் இருக்கத்தான் செய்கிறது. நான் விஜய் கட்சியில் சேர போவதில்லை.. அதற்கான எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை.. அப்படியே அழைப்பு வந்தாலும், நான் விஜய் கட்சியில் இணைவதாக இல்லை.. காரணம், 2018-ல் மக்கள் நீதி மய்யம் துவங்கியதுமே, அதன் நடுநிலைத்துவம் என்ற கொள்கை எனக்கு பிடித்திருந்தது. அதனால், அடுத்த மாதமே அந்த கட்சியில் இணைந்தேன்.

இந்துத்துவா: அந்தவகையில், ஒரு கொள்கை ரீதியாகத்தான், அக்கட்சியில் இணைந்தேன். அதே கருத்தியல் ரீதியான காரணங்களை முன்வைத்துதான்வெளியே வந்துள்ளேன்.. எத்தனையோ நடிகர், நடிகைகள் பிழைப்புவாதத்துக்காக, ஒரு கட்சியை விட்டு இன்னொரு கட்சிக்கு தாவுவதை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். நான் அப்படி இல்லை. இந்துத்துவாவுக்கு எதிரானவள்.. எனினும், அரசியல் களத்தில்தான் நான் தொடர்ந்து இருப்பேன்” என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் இவர் இந்துத்துவா கொள்கைக்கு எதிராக உள்ளார் என்பதால் மக்கள் நீதி மையத்திலிருந்து விலகி, தவெகாவிலும் இணையவில்லை என கூறிவந்த நிலையில் தற்போது தமிழகத்தை தனது கருத்தியலால் கலக்கிக் கொண்டு வரும் நாம் தமிழர் கட்சியில் இணைந்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களோடு நடிகை வினோதினி பயணிக்க வாய்ப்பு உண்டு என அரசியல் விமர்சனங்கள் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!