அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டி.டி.வி தினகரன் MLA அவர்களின் 57வது பிறந்த நாள் விழா மதுரையில் கொண்டாடப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.மகேந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி மதுரை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக தோப்பூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை விருந்துடன் அன்னதானம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை மாவட்ட பாசறை செயலாளர் திரவிய கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாணவரணி மாவட்ட செயலாளர் சக்திவேல், மீனவர் அணி மாவட்ட செயலாளர் ஜெயராமன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் வினோத்,பொறியாளர் அணி மாவட்ட செயலாளர் பொன்னாங்கன்,மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகி உமேஷ்,பாசறை நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.