குமரி மாவட்டம் நல்லூரில் 108 ஏழை விவசாயிகளுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் இலவச ஆடு, தென்னை மரக் கன்றுகள் வழங்கப்பட்டது. கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி செல்வகுமார் வழங்கினார்.
குமரி மாவட்டத்தில் கலப்பை மக்கள் இயக்கம் மூலமாக கொரானா தொற்று பரவல் ஆரம்ப காலத்திலிருந்து தற்போது வரை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆடு,தென்னங்கன்று, அரிசி, காய்கறி உள்ளிட்ட பல்வேறு வகையான நிவாரண பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது.இந்த இயக்கம் நிவாரண உதவிகளை சுமார் 125 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வழங்கி வருகிறது.
தற்போது விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை அரசு கண்டுகொள்வதாக தெரியவில்லை. ஒரு நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தான். ஆனால் அதன் நிலைமை தற்போது மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி. செல்வகுமார் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டி குமரி மாவட்டம் நல்லூரில் சுமார் 108 விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு ஆடு மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ் எம் சி கூட்டுறவு வங்கி சேர்மன் விஜய் கிருஷ்ணா, கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சிவ பன்னீர்செல்வன், மாவட்ட செயலாளர் ஜாண்கிறிஸ்டோபர், சட்ட ஆலோசகர் வக்கீல் பாலகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் ஜெபர்சன், புஷ்பராஜ், ஜீவா, ஆனந்த் கார்த்திக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.