நாடு முழுவதும் மூலிகை பெட்ரோலை விற்பனை செய்வதற்கான உரிமம் குறித்து தனியார் நிறுவனத்துடன் ராமர் பிள்ளை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் மூலிகை எரிபொருள் தயாரிக்கும் முறை குறித்து ராமர்பிள்ளை, செய்தியாளர்களிடம் செயல் முறை விளக்கம் அளித்தார். மூலிகை எரிபொருளை கொண்டு இருசக்கர வாகனத்தை இயக்கியும் காண்பித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது கண்டுபிடிப்பான மூலிகை எரிபொருள் விற்பனை உரிமையை கேரள மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் தனது 21 ஆண்டுகால போராட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்த அவர், கேரளாவில் வரும் 18ம் தேதி முதல் மூலிகை பெட்ரோல், லிட்டர் 39 ரூபாய்க்கு விற்பனைக்கு வரவுள்ளதாகவும் கூறினார்.