வேலூர் மாவட்டம்,தொரப்பாடி எழில்நகர் பகுதியில் ஷத்ரியா ஃபிலிம் டெக்னாலஜி சார்பில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு 24 மணி நேரம் தொடர் நினைவஞ்சலி நிகழ்ச்சி 24.10.2020 சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த இசை நிகழ்ச்சியில் வேல்முருகன்,கார்த்திக் மற்றும் பிரியா ஆகிய மூன்று பாடகர்கள் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களை காலை 8 மணிக்கு துவங்கி எஸ்.பி. தொடர்ந்து இடைவிடாது 24 மணிநேரமும் பாடி ஞாயிற்றுகிழமை காலை 10 மணிக்கு நிறைவு செய்தனர். இந்த நிகழ்ச்சியை அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நந்தக்குமார் நிறைவு செய்து நினைவஞ்சலியில் தொடர்ந்து 24 மணி நேரமும் பாடிய பாடகர்கள் கார்த்திக்,பிரியா மற்றும் வேல்முருகன் ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் மற்றும் அச்சம்தவிர் அறக்கட்டளையின் தலைவரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான ஜெய்ஸ்ரீதேவி சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கொரோனா ஊரடங்கு காலமென்பதால் தமிழக அரசு விதித்த கட்டுப்பா பாடுகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 24 மணிநேரம்.,24நிமிடங்கள்., 24வினாடிகள் என தொடர்ந்து பாடல் பாடி தங்களின் அஞ்சலியை பாலசுப்பிரமணியத்துக்கு செலுத்தியது இசைப்பிரியர்களுக்கும், கலைத்துறையினருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.