கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது. துப்பாக்கி தோட்டாவை விட வீரியமானது புத்தகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த புத்தகத்தையும் அதன் பதிப்புரிமையும் கொண்டாடும் வகையில் ஏற்படுத்தப்பட்டது தான் உலக புத்தக தினம்.
உலகப் புத்தக நாள் (World Book Day) அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் நாளன்று கடைபிடிக்கப்படும் ஒரு நிகழ்வு புத்தக நாள் ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல்23
உலக புத்தக தினம் குறித்து திருச்சிராப்பள்ளி
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்