
மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிட்டு உள்ள விவரங்கள்:
எய்ம்ஸ் மதுரை அரசு மருத்துவமனையில் தங்களுடைய மாணவர்களை தற்காலிகமாக ராமநாதபுரம் கல்லூரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை எய்ம்ஸ் மாணவர்களை இராமநாதபுரம் பகுதியில் தனியார் கட்டிடத்தில் தங்க வைக்க மேலும் ஒரு வருடம் நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் (2024–25)ம் ஆண்டு மாணவர்கள் கூடுதல் சேர்க்கை வேகமாக அதிகரிக்கக்கூடும் என்பதால் ஆர்வமுள்ள தரப்பினர் மதுரை AIIMS க்கு தங்கும் விடுதியை வாடகைக்கு எடுக்க தங்களின் சிறந்த விலையை வழங்கலாம் என்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.மதுரை எய்ம்ஸ் முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு விடுதி ஓராண்டு மற்றும் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 50 மாணவர்கள் தங்குவதற்கான காற்றோட்டமான அறைகள், ஒரு நூலகம், சாப்பிடுவதற்கு தனியான இடம் மற்றும் 50 மாணவர்களுக்கான சுத்தமான கழிப்பறை போன்றவை இருக்க வேண்டும் என்றும்.
மாணவர்கள் கிரிக்கெட், வாலிபால், பேஸ்கட் பால், புட்பால் விளையாடுவதற்கு வெளி விளையாட்டு அரங்கம் மற்றும் பேட்மிட்டன் டேபிள் டென்னிஸ் போன்ற உள்விளையாட்டு அரங்கத்திற்கும் இடம் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதியின் ஒப்பந்தப்புள்ளிக்கு முன்மொழியப்பட்ட வசதிகள் தற்போது மாணவர்கள் தங்கி உள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும் என்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் நான்காம் தேதி தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டுமென்று அதன் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராமநாதபுரத்தில் உள்ள எய்ம்ஸ் மாணவர்களை மதுரைக்கு மாற்றுவதற்காக மதுரையில் தற்காலிக இடம் வேண்டுமென்று எய்ம்ஸ் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது ராமநாதபுரத்திலேயே கூடுதலாக விடுதிகள் வேண்டுமென்று அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.