மாரடைப்பால் ‘ஸ்டென்ட்’ பொருத்தி சிகிச்சை பெற்றும் ஓய்வெடுக்காமல் பணிக்கு திரும்பிய மயிலாடுதுறை ஆட்சியர்

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், மாற்றுத் திறனாளி ஒருவரிடம் கோரிக்கை குறித்து கேட்டறிந்த ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி.

மயிலாடுதுறை: மாரடைப்பு ஏற்பட்டு ‘ஸ்டென்ட்’ பொருத்தியும் ஓய்வெடுக்காமல் மயிலாடுதுறை ஆட்சியர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டதை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ஏ.பி.மகாபாரதி. கடந்த ஜூன் 26-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர்,மதியம் தமது முகாம் அலுவலகத் துக்குச் சென்றபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தஞ்சாவூர் தனியார்மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. பின்னர், கடந்த 29-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அவர், தொடர்ந்து, ஓய்வு எடுக்காமல் நேற்று மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போதுபேசிய ஆட்சியர், ‘உங்களின் (பொதுமக்களின்) பிரார்த்தனைதான் என்னை காப்பாற்றியது, அனைவருக்கும் நன்றி’ என்று கூறினார்.

பொதுமக்கள் வேண்டுதல்: முன்னதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ‘அனைத்து தரப்பு மக் களின் நன்மதிப்பையும் பெற்று, மாவட்ட வளர்ச்சிக்காக தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஆட்சியர் விரைந்து குணமடைந்து பணிக்கு திரும்ப வேண்டும்’ என மயிலாடுதுறை மாவட்ட மக்கள் பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!