
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி முனியாண்டி புரம் கண்மாயில் மீன்பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையில் 8 அடி நீள மலைபாம்பு ஒன்று சிக்கிக்கொண்டது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை மீன்பிடிப்பதற்காக கண்மாய்க்கு வந்த அந்த பகுதி இளைஞர்கள் சிலர் மீன் பிடி வலையை பார்த்தபோது பெரிய மலைப்பாம்பு ஒன்று வலையில் மாட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது உடனே திருநகரை சேர்ந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபு என்பவருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த ஸ்நேக் பாபு மீன்பிடி வலையில் மாட்டிக் கொண்டிருந்த 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பத்திரமாக மீட்டர் பின்னர் வனத்துறையிக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மதுரை வனத்துறை அதிகாரி விவேகானந்தர் மலைப்பாம்பு பத்திரமாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீன்பிடிப்பதற்காக போடப்பட்டிருந்த வலையில் மலைப்பாம்பு ஒன்று மாட்டிக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.