பெண் காவலரை வெட்டிய விவகாரத்தில் கணவர் கைதுகாஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பட்டப் பகலில் பெண் காவலரை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணி செய்பவர் டில்லிராணி(33). இவரது கணவர் மேகநாதன். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுதர்ஷினி(7) என்ற மகளும், சந்திரசேகர்(3) என்ற மகனும் உள்ளனர். டில்லிராணி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கிறார். விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கையும் எடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் டில்லிராணி பணி முடித்துவிட்டு, சாலைத் தெரு சங்கர மடம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்குச் சென்றுபணம் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தார். அப்போது கணவர் மேகநாதன் டில்லிராணியை வழிமடக்கி கத்தியால் வெட்டினார். இதில் டில்லிராணியின் இடது கையில் காயம் ஏற்பட்டது.

காஞ்சி போலீஸார் விசாரணை: இதனைத் தொடர்ந்து இவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

டில்லிராணியை வெட்டிய மேகநாதன் அங்கிருந்து புதுச்சேரி தப்பிச் சென்றார். அவரது செல்போன் சிக்னலை போலீஸார் கண்காணித்து வந்தனர். அவர் புதுச்சேரியில் இருந்து மீண்டும் காஞ்சிபுரம் வந்தபோது அவரை மாவட்ட எல்லையில் கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!