திருவண்ணாமலையில் அலைமோதும் கூட்டம் – பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்.. பக்தர்தர்கள் வேதனை!

திருவண்ணாமலையில் அலைமோதும் கூட்டம் – பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்.. பக்தர்தர்கள் வேதனை!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சாமி தரிசனம் சுமார் செய்ய 6 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 13-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளிக்கும்.

அதன்படி நாளை (திங்கட்கிழமை) வரை மலை உச்சியில் மகா தீபம் காட்சியளிக்கும். இந்த நிலையில் மகா தீபத்தை தரிசனம் செய்ய அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

அதன்படி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கட்டண தரிசன வரிசை அம்மணி அம்மன் கோபுரம் கோவிலுக்கு வெளியே வரை நீண்ட வரிசையில நின்றனர்.

பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் சுமார் செய்ய 6 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலமும் சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!