டபுள் ட்ரீட் அதிரடி – விஜய்யின் ‘தி கோட்’ முதல் கிளிம்ப்ஸ் வீடியோ எப்படி?

சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தி கோட்’ படத்திலிருந்து வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் 2-வது சிங்கிள் பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் இன்று (ஜூன் 22) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நள்ளிரவு 12.01 மணிக்கு விஜய் பிறந்தநாளுக்காக ‘ப்ரத்டே ஷாட்ஸ்’ என்ற பெயரில் ஒரு சிறிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் வெளிநாட்டில் நடக்கும் சேஸிங் காட்சி ஒன்றின் சிறிய கிளிம்ப்ஸ் ஒன்று இடம்பெற்றுள்ளது. வயதான தோற்றத்தில் இருக்கும் விஜய் பைக் ஓட்ட, பின்னால் இளம் வயது விஜய் கையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கிறார். விஜய்யின் பிறந்தநாளன்று ‘தி கோட்’ பட அப்டேட் கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த வீடியோ டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!