சென்னை: நடிகர் விஜய் இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தால் பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை என்று விஜய் அறிவித்த போதும், அவரது ரசிகர்கள் இணையத்தில், அவரின் வீடியோக்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகராக இருந்து மக்கள் நெஞ்சில் குடி கொண்ட நடிகர் விஜய், தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவர் அரசியல் கட்சித் தொடங்கிய பின் அவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது என்பதால், இந்த பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்ட ரசிகர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தால் கொண்டாட்டம் இல்லை என அறிவித்து விட்டார். இருந்தாலும் பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
![Vijay Birthday venkat prabhu prabhu deva Vijay Birthday venkat prabhu prabhu deva](https://images.filmibeat.com/ta/img/2024/06/thalapathy-17102619061-1719038343.jpg)
இயக்குநர் வெங்கட் பிரபு, “THE GOAT” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு ”Happy Birthday அண்ணா… ஐ லவ் யூ அண்ணா” என வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் ஷார்ட்ஸ் வீடியோவை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிந்து படம் செப்டம்பர் மாதம் 5ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரபு தேவா, பிரசாந்த், மைக் மோகன் என பலர் நடித்துள்ளனர்.
![Vijay Birthday venkat prabhu prabhu deva Vijay Birthday venkat prabhu prabhu deva](https://images.filmibeat.com/ta/img/2024/06/screenshot53681-1719038376.jpg)
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி: மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவரான விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு மேஜிக்கல் ஆக அமைந்தது. வாய்ப்பு அளித்ததற்கும், கோட் படத்தின் மறக்க முடியாத நினைவுகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். அதே போல பிரபு தேவா கோட் படப்பிடிப்பின் போது எடுத்த போட்டோவை ஷேர் செய்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
![Vijay Birthday venkat prabhu prabhu deva Vijay Birthday venkat prabhu prabhu deva](https://images.filmibeat.com/ta/img/2024/06/screenshot53691-1719038261.jpg)
அதே போல் விரைவில் மணப்பெண்ணாக உள்ள நடிகை வரலட்சுமி, விஜய்யுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகை வரலட்சுமி விஜய்யுடன் சர்க்கார் படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் தான் விஜய், அரசியல் குறித்தும் வாக்கின் முக்கியத்துவத்தை பற்றி பேசி இருந்தார்.
![Vijay Birthday venkat prabhu prabhu deva Vijay Birthday venkat prabhu prabhu deva](https://images.filmibeat.com/ta/img/2024/06/screenshot53701-1719038290.jpg)
![Vijay Birthday venkat prabhu prabhu deva Vijay Birthday venkat prabhu prabhu deva](https://images.filmibeat.com/ta/img/2024/06/fb6-1719038197.jpg)
விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று போக்கிரி படம் ரீ ரிலீஸ் ஆனது. போக்கிரி படத்தின் தூள் கிளப்பும் பாடல்களும் காமெடி சீன்களும் இன்று வரை பிரபலமாக இருக்கின்றன. இந்த படம் மட்டுமின்றி மெர்சல், கத்தி, அழகிய தமிழ் மகன், மாஸ்டர் உள்ளிட்ட படங்களும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. போக்கிரி படத்தை தியேட்டரில் பார்த்த நடிகை சனம்ஷெட்டி, போக்கிர பொங்கல் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு, விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
![Vijay Birthday venkat prabhu prabhu deva Vijay Birthday venkat prabhu prabhu deva](https://images.filmibeat.com/ta/img/2024/06/fb7-1719038209.jpg)
அதே போல, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நடிகர் விஜய்க்கு எக்ஸ் தளப்பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.