கன்னியாகுமரியில்
விவசாயிகளுக்கு ஆதரவாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாய மசோதாக்களை திரும்ப பெற கேட்டும், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாகவும் கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் முன்பு மீனவமக்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு திருத்தல அதிபர் ஆன்றனிஅல்காந்தர் தலைமை வகித்தார்.பங்கு பேரவை துணைதலைவர் நாஞ்சில்மைக்கேல் முன்னிலைவகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும்,விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.