கொல்லிமலை அருகே இருசக்கர வாகன விபத்து – மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவன் பலி!

கொல்லிமலை அருகே இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவன் பலியான சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தை சேர்ந்த காஞ்சி வனத்துறை என்பவரின் மகன் அதிகித் (வயது 20) மூன்றாம் ஆண்டு கல்லூரிப் படிப்பு படித்து வருகிறார். மற்றும் மதுரை முனிச்சாலையை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் பால் முனீஸ்வரன் (வயது 20) இருவரும் கடந்த 7ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை கோயிலுக்கு சென்று சுற்றிப் பார்த்துவிட்டு மாலை வேளையில் மதுரைக்கு வீடு திரும்பி கொண்டு இருந்தபோது கரூர் – திண்டுக்கல் NH-44 சாலையில் சித்தம்பட்டி காலனி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமா அவரது இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே அதிகித் பரிதாபமாக உயிரிந்தார். உடன் பயணித்த பால் முனீஸ்வரன் பலத்தகாயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அதிகித்-ன் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அமரர் ஊர்தி வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான மதுரை திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமத்தில் நேற்று முன் தினம் மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!