கன்னியாகுமரி அரசு பழத் தோட்டத்தில் அமைந்துள்ள சுற்றுசூழல் பூங்கா எட்டு மாதத்திற்கு பிறகு நேற்று முதல் செயல்படதொடங்கியது.
கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் சுமார் 5 ஏக்கரில் சுற்றுச்சூழல் அமைந்துள்ளது . இந்த பூங்காவில் செயற்கை நீரூற்று, சிறுவர் பூங்கா, மூங்கில் பூங்கா, மூலிகைத்தோட்டம், பூந்தோட்டம், அலங்காரச் செடிகள் மற்றும் மரங்கள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்ட சுற்று சூழல் பூங்கா கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு மூடப்பட்டது.இந்நிலையில் தமிழக அரசு கொரோனா கட்டுபாடுகள் தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பூங்காவையும் திறக்க அனுமதி அளித்து உத்தரவிடபட்டது.இதனையடுத்து நேற்று முதல் பூங்கா பார்வையாளர்களுக்காக செயல்படதொடங்கியது. இதனையடுத்து பூங்காவில் வளர்ந்து காணப்பட்டது அலங்கார செடிகளை வெட்டி சீரமைத்து, பராமரிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.இந்த பணிகளை தோட்டக்கலைத்துறை உதவிஇயக்குனர் ஷீலாஜாண் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பாதிப்புக்கு பின்னர் தற்போது பூங்காவை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்