தமிழக அரசு பொதுமக்கள் நலன் கருதி பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக கரும்பு, சீனி, ரூ.2500 உதவித்தொகை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழகம் முழுவதும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம்
அஞ்சுகிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூர் கழக செயலாளர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் பரமசிவன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெஸீம் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பரிசு தொகுப்பினை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் இரவிபுதூரில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு வங்கி தலைவர் லட்சுமி சீனிவாசன் தலைமை தாங்கினார் இயக்குனர்கள் வள்ளிநாயகம் பிள்ளை பத்மாவதி மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக மருங்கூர் பேரூர் கழக செயலாளர் சீனிவாசன் பயனாளிகளுக்கு பரிசு தொகுப்பினை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மயிலாடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாகராஜன், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள், கூட்டுறவு வங்கி செயலாளர் மேரி ரோஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மயிலாடி பேரூர் கழக செயலாளர் மனோகரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பரிசினை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.